விளையாட்டு

தூய்மையான நிர்வாகம்: சஷாங்க் மனோகருக்கு லலித் மோடி வாழ்த்து

பிடிஐ

பிசிசிஐ தலைவராக இருந்த டால்மியா கடந்த மாதம் மரணமடைந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ-யின் சிறப் பு பொதுக்குழு கூட்டத்தில் சஷாங்க் மனோகர் பிசிசிஐ தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டால்மியாவின் மகன் அவிஷேக், மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி, திரிபுரா கிரிக்கெட் சங்கத்தின் சவுரவ் தாஸ் குப்தா, அசாம் கிரிக்கெட் சங்கத்தின் கவுதம் ராய், ஒடிசா கிரிக்கெட் சங்கத்தின் ஆஷிர்பாத் பெஹரா, ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்தின் சஞ்சய் சிங் ஆகியோர் அவரது பெ யரை முன் மொழிந்தனர்.

58 வயதான சஷாங்க் மனோகர் 2வது முறையாக பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இந்நிலையில் அவ ருக்கு ஐபிஎல் முன்னாள் சேர்மன் லலித் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ‘‘மீண்டும் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற சஷாங்க் மனோகருக்கு வாழ்த்துக்கள். இதன்மூலம் ஐபிஎல், பிசிசிஐ மற்றும் ஐசிசி ஆகியவற்றில் தூய்மையான நிர்வாகத்தை ஏற்படுத்த முடியும். இதற்கான தகுதி இவரிடம் மட்டுமே உள்ளது.’’ என தெரிவித்துள்ளார்.

இதேபோல, பீகார் கிரிக்கெட் சங்க தலைவர் ஆதித்யா வர்மாவும், சஷாங்க் மனோகருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 2008-2011 வரை பிசிசிஐ தலைவராக சஷாங்க் மனோகர் இருந்த போது தான் ஐபிஎல் தொடரில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அப்போதைய ஐபிஎல் சேர்மன் லலித் மோடி பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT