சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் நடால் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் இத்தாலியின் பாபியோ பாக்னினியை வீழ்த்தி இறுதிச்சுற்றை உறுதி செய்தார்.
இதன்மூலம் இந்த ஆண்டில் பாக்னினியிடம் 3 முறை கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள் ளார் நடால். இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் நடால் வெல்லும்பட்சத்தில் இந்த ஆண்டில் அவர் வென்ற 4-வது சாம்பியன் பட்டமாக அது அமையும்.
பார்மை இழந்து தவித்து வரும் நடால், இந்த ஆண்டில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லவில்லை. 2004 முதல் தொடர்ச்சியாக ஏதாவது ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்று வந்த நடால், இந்த ஆண்டில் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். இதனால் தரவரிசை யிலும் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.