விளையாட்டு

எனக்கு கோபம்தான் வந்தது.. ஷமிதான் உண்மையான ஆட்ட நாயகன்:  மனம் திறந்த கிறிஸ் கெய்ல்

ஐஏஎன்எஸ்

கிங்ஸ் லெவன்பஞ்சாபுக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நேற்று பரபரப்பான முறையில் டை ஆகி, பிறகு சூப்பர் ஓவரிலும் டை, ஆக இரண்டாவது சூப்பர் ஓவரில் கெய்ல், மயங்க் அகர்வால் மூலம் வென்று மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் வெற்றிகளை நிறுத்தியது.

நேற்று நடைபெற்ற 2 போட்டிகளுமே சூப்பர் ஓவருக்குச் சென்றது மதியம் நடந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் , கொல்கத்தா மோதின் இந்தப் போட்டியும் சூப்பர் ஓவருக்கு சென்றது இதில் கொல்கத்தா வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா சிறப்பாக வீசி கிங்ஸ் லெவனை 5 ரன்களுக்கு மட்டுப்படுத்த 6 ரன்கள் வெற்றி என்ற நிலையில் அனுபவமும் அதிரடி அணுகுமுறையும் கொண்ட குவிண்டன் டி காக், ரோஹித் சர்மாவுக்கு தொடர் யார்க்கர்களை வீசி 6 வெற்றி ரன்களை எடுக்க விடமால் ஷமி தடுத்தார். இப்படிப்பட்ட பந்து வீச்சை ஒருமுறை முனாப் படேல் ராஜஸ்தான் ராயல்ஸுக்காக வீசி கடைசி ஓவரில் 4 ரன்களை எடுக்கவிடாமல் செய்தது நினைவில் இருக்கலாம்.

இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக 2 சூப்பர் ஓவர்க்ளுக்கு பஞ்சாப்-மும்பை ஆட்டம் சென்றது, இதில் தான் பதற்றமடையவில்லை மாறாக கோபமும் ஏமாற்றமும் ஏற்பட்டது என்று யுனிவர்ஸ் பாஸ், கிறிஸ் கெய்ல் தெரிவித்தார். இவர் ட்ரெண்ட் போல்ட்டை ஒரு சிக்ஸ் அடித்து, ஒரு சிங்கிள் எடுத்தார், மயங்க் இறங்கி 2 பவுண்டரிகளை விளாச பஞ்சாப் வென்றது. போல்ட் வெறும் புல்டாஸ்களாக வீசி சொதப்பினார்.

ஐபிஎல் டி20.காம் இணையதளத்துக்காக மயங்க் அகர்வாலும் கிறிஸ் கெய்லும் வீடியோ உரையாடலில் ஈடுபட்டனர், இதில் கிறிஸ் கெய்ல் கூறியதாவது:

நான் பதற்றமாக, இல்லை எனக்கு கோபமும் ஏமாற்றமும் ஏற்பட்டது. எளிதில் வெல்ல வேண்டியதை இப்படிக் கொண்டு வந்து விட்டோமே என்ற கோபம், ஏமாற்றம்.

ஆனால் கிரிக்கெட்டில் இது சகஜம் என்று தேற்றிக் கொண்டேன்.

என்னைப் பொறுத்தவரை ஷமிக்குத்தான் ஆட்ட நாயகன் விருது கொடுக்க வேண்டும். ரோஹித்துக்கு, டி காக்குக்கு எதிராக 6 ரன்களை தடுக்க முடிந்தது அட்டகாசம். நான் வலையில் இவரை ஆடியுள்ளேன், யார்க்கர்களை நன்றாக வீசுவார். இன்று அவர் தன் யார்க்கர்களால் வெற்றியை எங்களுக்குச் சொந்தமாக்கினார், என்றார் கிறிஸ் கெய்ல்.

SCROLL FOR NEXT