ஆர்சிபி அணிக்கு எதிரான பஞ்சாப் அணியின் ஐபிஎல் ஆட்டத்தில் 18வது ஓவரிலேயே ஆட்டம் முடிந்திருக்க வேண்டும்.
ஆனால் கெய்லினால் ஓட முடியாமல் போனதாலும் அவர் ரன் அவுட் ஆனதாலும் ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களுக்கு ‘திக் திக்’ போட்டியாக அமைந்தது.
கடைசியில் நிகோலஸ் பூரன் சிக்ஸ் அடித்து நிம்மதிப் பெருமூச்சு தந்தார்.
யுனிவர்ஸ் பாஸ் கெய்ல் வெளுத்து வாங்கினார், தொடக்கத்தில் மயங்க் அகர்வால், கேப்டன் ராகுல் ஜோடி 8 ஓவர்களில் 78 ரன்களைச் சேர்த்து விராட் கோலியின் ஆர்சிபியிடமிருந்து ஆட்டத்தை வெகுதூரம் கொண்டு சென்றனர், ஆனாலும் கடைசி ஓவர் கடைசி பந்து வரை ஆட்டம் சென்றதில் ரசிகர்கள் இருதயத் துடிப்பு எகிறியது.
இந்நிலையில் பஞ்சாப் அணியின் உரிமையாளார்களுள் ஒருவரான பிரீத்தி ஜிந்தா கூறும்போது, “ஒரு வழியாக மிகவும் அவசியமான வெற்றியைப் பெற்றிருக்கிறோம்.
கிரிக்கெட்டின் பெயரில் எங்கள் அணியினர் மக்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமாறு ஆடக்கூடாது என விரும்புகிறேன்.
பஞ்சாப் சிங்கங்கள் ஆடும் போட்டிகள் பலவீனமான இதயம் கொண்டவர்களுக்கானதல்ல என்று எச்சரிக்கிறேன். இந்தப் போட்டியில் கடைசி வரை போராடிய பெங்களூரு அணி பவுலர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் பிரீத்தி ஜிந்தா.