விளையாட்டு

செய்தித் துளிகள்...

செய்திப்பிரிவு

ஹாக்கி விளையாட்டைப் பிரபலப்படுத்தும் வகையில் 6 பேர் கொண்ட அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை போட்டியை தொடங்குமாறு சர்வதேச ஹாக்கி சம்மேளனத்துக்கு பரிந்துரை செய்வேன் என முன்னாள் இந்திய கேப்டன் திலீப் திர்கே தெரிவித்துள்ளார்.

------------------------------------------------------------------

வங்கதேச ஏ அணி-கர்நாடகம் இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி மைசூரில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி, கர்நாடகத்தின் பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாமல் 38.4 ஓவர்களில் 158 ரன்களுக்கு சுருண்டது. கர்நாடகம் தரப்பில் பிரசாத் கிருஷ்ணா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் ஆடிய கர்நாடக அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத் துள்ளது. பாவ்னே 55 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

------------------------------------------------------------------

சர்வதேச டென்னிஸ் சம்மேளன தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 25-ம் தேதி சிலியின் சான்டியாகோ நகரில் நடைபெறுகிறது. அதில் இந்திய டென்னிஸ் சங்க தலைவர் அனில் கன்னா போட்டியிடுகிறார்.

SCROLL FOR NEXT