உலகின் தலைசிறந்த வேகப்பந்து பவுலர் கேகிஸோ ரபாடா போன்ற ஒரு பவுலருக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் அடித்த ஷாட்கள் தன்னை ஆச்சரியமடையச் செய்ததாக முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் சற்றேறக்குறைய எளிதாகவே வீழ்த்தியது. இதன் மூலம் முதலிடம் பிடித்தது.
இந்தப் போட்டி குறித்த் தன் யூடியூப் சேனலில் ரிவியூ செய்த ஆகாஷ் சோப்ரா, “மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் அச்சமற்ற போக்கைக் கொண்டிருந்தது. ரோஹித் அவுட் ஆனாலும் அது ஒரு விஷயமேயல்ல என்று ஆடினர். குவிண்டன் டி காக் தான் ஒரு மேட்ச் வின்னர் என்ற ஆகிருதியில் ஆடுகிறார்.
இவருடன் சூர்யகுமார் யாதவ் இணைந்தார், இவருக்கு வானம்தான் எல்லை. இஷான் கிஷனும் நன்றாக ஆடினார். சூர்யகுமார் யாதவ்தான் டெல்லிக்கு எதிரான போட்டியில் ஆட்டத்தை மாற்றியவர். அவரது கவருக்கு மேலான ஷாட்கள், பிளிக்குகள், கட் ஷாட்கள் அபாரமானவை.
அதுவும் ஐஸ்கீரிம் மீது வைக்கும் செர்ரி பழம் போன்றது அவர் ரபாடா பந்தை பிளிக் செய்து சிக்சருக்கு அனுப்பியது. அந்த சிக்ஸரைப் பார்த்து ஆ! என்று நான் வாய் பிளந்தேன். என்ன மாதிரியான சிக்ஸ் அது. சூர்யகுமார் யாதவ் நிச்சயம் இந்திய அணிக்கு ஆட வேண்டும். 2020 முடிவதற்குள் அவர் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.
இவருக்காக என் இதயத்திலிருந்து எழும் கோரிக்கை இது, நிச்சயம் நடக்கும் என்று கருதுகிறேன்” இவ்வாறு கூறினார் சூர்யகுமார் யாதவ்.