3 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற 9 முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற சிஎஸ்கே அணியின், 7 முறை இறுதிக்குள் நுழைந்த சிஎஸ்கே அணியின் ஐபிஎல் அற்புத நாட்கள் முடிவுக்கு வருகிறதோ என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ஐயம் தெரிவித்துள்ளார்.
இதுவரை 7 ஆட்டங்களி 5 தோல்விகளைச் சந்தித்தது சிஎஸ்கே, முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக சூப்பர் கேப்டன்சி செய்த தோனியின் அரதப் பழசான உத்திகளை நவீன கேப்டன்கள் சிதறடித்து வருகின்றனர்.
சென்னை அணி இன்னும் போட்டியில் இல்லாமல் இல்லை. மீதி வரும் போட்டிகளில் வென்று தன் பிளே ஆஃப் வாய்ப்பைத் தக்க வைக்க முடியும். சொல்ல முடியாது ஒருவேளை பிளே ஆஃப் சுற்றுக்கு வந்தாலும் வரலாம்! ஷேன் வார்ன் சொன்னது போல் சிஎஸ்கே இல்லாத பிளே ஆஃப் கிடையாது.
இந்நிலையில் சிஎஸ்கே கப்பலில் ஏகப்பட்ட ஓட்டைகள் என்று கேப்டன் தோனியே ஒப்புக் கொண்டு பேட்டியளித்தார். மீதமுள்ள கிரிக்கெட் நாட்களை என்ஜாய் செய்யும் விதமாக தோனி தொடக்கத்தில் இறங்கி பவர் ப்ளேயில் பந்துகளை தூக்கித் தூக்கி அடித்து சிஎஸ்கேவுக்கு மறு வாழ்வு கொடுக்கலாம், அல்லது 1, 2ம் நிலையில் இறங்கி கடைசி வரை நின்று அணியை வழிநடத்தலாம். பினிஷர் என்ற ஹோதாவெல்லாம் முடிந்து விட்டது, எனவே பினிஷர் ரோலுக்கு வேறு இளம் வீரரை தயார் செய்யலாம்.
இதையெல்லாம் அவர் செய்வாரா என்று தெரியவில்லை, இந்நிலையில் மைக்கேல் வான் தன் ட்விட்டரில், “ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி தலைமை சிஎஸ்கேவின் அற்புத நாட்கள் முடிவுக்கு வருகிறதோ என்று நான் அஞ்சுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
விரேந்திர சேவாக் தன் ட்விட்டரில், ’சென்னை ரசிகர்களுக்காக வருந்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.