டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக சொதப்பிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 229 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய பொது கடைசி 4 ஒவர்களில் 78 ரன்கள் தேவை என்ற நிலையில் மோர்கன், ராகுல் திரிபாதி கூட்டணி கதிகலக்கினர்.
ஆனாலும் வெற்றி பெற முடியவில்லை, திரிபாதி, மோர்கன் மட்டையிலிருந்து சிக்சர் மழை பொழிந்தது, ஆனால் வெற்றி கைகூடவில்லை.
இந்நிலையில் கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:
வீரர்கள் பேட் செய்த விதம் பெருமையளிக்கிறது. தொடர்ந்து வெற்றிக்காகப் போராடினோம். இந்த அணியின் இயல்பே போராட்டக்குணம்தான்.
உள்ளபடியே சொல்லப்போனால் இன்னும் 2 - 3 சிக்சர்கள் அடித்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம். மைதானம் சிறியது அதனால் பவுலர்கள் மீது அதிகம் குறை காண முடியாது.
ஆனால் கூடுதலாக 10 ரன்கள் அளித்திருக்கிறோம், இது அதிகமே. ரஸல் இன்னும் செட்டில் ஆகவில்லை, அதற்கு அவகாசம் வழங்குவோம். அவர் தாக்கம் ஏற்படுத்த இன்னும் கொஞ்சம் வாய்ப்பு வழங்குவோம்.
நரைனின் ரோல் குறித்து பயிற்சியாளர்களிடம் விவாதிப்பேன். ஆனால் எனக்கு நரைன் மீது முழு நம்பிக்கை இருக்கிறது, என்றார்.