அதிரடி வீரர்களைக் கொண்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு சிறப்பாக வீசி வெற்றிக்கு வித்திட்டார் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்.
2017 ஐபிஎல் தொடரில் ரூ.3 கோடிக்கு நடராஜனை ஏலம் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப், பிறகு இவரைக் கழற்றி விட்டது. கடந்த 2 சீசன்களகா சன் ரைசர்ஸுக்கு ஆடியும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
இந்த முறை டெல்லி அணிக்கு எதிராக 4 ஓவர்களில்ல் 25 ரன்கள் என்று சிக்கனம் காட்டி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார், அன்று அவரது பந்து வீச்சின் முக்கிய அம்சமே யார்க்கர்கள்தான்.
இதனையடுத்து இவர் கவன ஈர்ப்பு பெற்றார்.
சேவாக், பிராவோ, பிரெட் லீ, ஹர்ஷா போக்ளே ஆகியோர் இவருக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
சேவாக்: கடைசி ஓவர்களில் யார்க்கர்களை வீசுவது என்ற திட்டத்தை துல்லியமாகச் செயல்படுத்தினார் நடராஜன். இது அவருக்கு உத்வேகத்தைத் தந்திருக்கும், சுழலில் ரஷீத் கானும் அபாரமாக வீசினார், அனைத்து அணிகளும் வெற்றிபெறத் தொடங்கியிருப்பது நல்ல அறிகுறி.
பிராவோ: நடராஜன் யார்க்கர்களை வீச நல்ல முறையில் பயிற்சி எடுத்திருக்கிறார். தமிழகத்துக்கும் அவருக்குமே மகிழ்ச்சியாக இருந்திருக்கும்
பிரெட் லீ: கடைசி நேரத்தில் நடராஜன் வீசிய விதம் சிறப்பாக இருந்தது.
ஹர்ஷா போக்ளே: ஐபிஎல் தொடரில் யார்க்கர்களை துல்லியமாக வீசி வருகிறார் நடராஜன்.
என்று பாராட்டியுள்ளனர்.