விளையாட்டு

ப்ளே ஆஃப் சுற்றில் சென்னை இல்லாததை நினைத்துப் பார்க்க முடியாது: ஷேன் வார்ன் நம்பிக்கை

செய்திப்பிரிவு

நடப்பு ஐபிஎல் தொடரில் 3 போட்டிகள் ஆடி 2-ல் தோற்று முதல் போட்டியில் வென்ற ‘டாடீஸ் ஆர்மி’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சிஎஸ்கே அட்டவணையில் 8ம் இடத்தில் உள்ளது.

நிகர ரன் விகிதமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. -0.84 என்று அதன் நிகர ரன் விகிதம் உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் 0.483 என்ற நிகர ரன்விகிதத்தில் டாப் இடத்தில் உள்ளது, டெல்லி கேப்பிடல்ஸுக்கும் சிஎஸ்கேவுக்கும் இடையே இப்போதைக்கு மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது.

ஆனால் சென்னை அணி இதுவரை இப்படியாடியதில்லை. அதற்காக தோனி தலைமை சிஎஸ்கேவை ஏரக்கட்டி விடமுடியாது, நிச்சயம் எழுச்சி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்கிறார் ஆஸ்திரேலிய லெஜண்ட் ஷேன் வார்ன்.

2008- தொடரில் ஷேன் வார்ன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் கோப்பையை வென்றது. இப்போது அந்த அணியின் தூதராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஷேன் வார்ன் கூறியதாவது:

ஐபிஎல் தொடரில் எப்போதும் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குச் சென்று விடும், அந்த இடத்தில் சென்னை இல்லாததை நினைத்துப் பார்க்க முடியாது.

சஞ்சு சாம்சன், ஸ்மித், ராகுல் திவேஷியா சிறப்பாக ஆடினால் ராஜஸ்தானும் அடுத்த சுற்றுக்குச் செல்லும். பேட்டிங் பவுலிங் சமபலம் கொண்ட மும்பை அணிக்கும் வாய்ப்புள்ளது. நான்காவதாக டெல்லி அணிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புள்ளது.

சஞ்சு சாம்சனைப் பொறுத்தவரை இதே பார்மில் தொடர்ந்தால் இந்திய அணியின் 3 வடிவங்களிலும் அவர்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனாகத் திகழ்வார்.

இவ்வாறு கூறினார் ஷேன் வார்ன்.

SCROLL FOR NEXT