விளையாட்டு

தென் ஆப்பிரிக்க தொடருக்கான பயிற்சி முகாமில் ஷமி

இரா.முத்துக்குமார்

உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி, தென் ஆப்பிரிக்கா தொடருக்கான தயாரிப்பு பயிற்சி முகாமுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூருவில் செப்டம்பர் 21 முதல் 27 வரை பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

தயாரிப்பு முகாமுக்காக தேர்வு செய்யப்பட்ட 30 இந்திய வீரர்கள் பட்டியல்:

பேட்ஸ்மென்கள்: விராட் கோலி, ஷிகர் தவண், முரளி விஜய், லோகேஷ் ராகுல், செதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, கருண் நாயர், சுரேஷ் ரெய்னா, ராயுடு, கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே.

விக்கெட் கீப்பர்கள்: தோனி, சஹா, நமன் ஓஜா.

ஆல்ரவுண்டர்கள்: ஜடேஜா, ஸ்டூவர்ட் பின்னி.

சுழற்பந்து வீச்சாளர்கள்: அஸ்வின், அமித் மிஸ்ரா, ஹர்பஜன் சிங், அக்சர் படேல், ஓஜா, கரண் சர்மா

வேகப்பந்து வீச்சாளர்கள்: இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஷ் குமார், வருண் ஆரோன், மொகமது ஷமி, மோஹித் சர்மா, தவல் குல்கர்னி.

SCROLL FOR NEXT