தென் ஆப்பிரிக்காவுக்கு எதி ரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளை யாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி பெங்களூரில் இன்று தேர்வு செய்யப்படுகிறது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ள தென் ஆப்பிரிக்க அணி, இந்தி யாவுக்கு எதிரான 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. டி20 தொடர் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கவுள்ள நிலை யில், தேர்வுக் குழுவினர் பெங்களூரில் இன்று கூடி இந்திய அணியை தேர்வு செய்கின்றனர்.
டி20 தொடரில் விளை யாடும் அணியும், முதல் 3 ஒருநாள் போட்டிகளில் விளை யாடும் அணியும் மட்டுமே இன்று தேர்வு செய்யப்படும் என தெரிகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அதை கருத்தில் கொண்டே அணி தேர்வு செய்யப்படு கிறது. இந்திய கேப்டன் தோனி 3 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களமிறங்க விருக்கிறார். தோனி, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, அஸ்வின், அஜிங்க்ய ரஹானே, அம்பட்டி ராயுடு ஆகியோர் வழக்கம் போல் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளை யாடிய முரளி விஜயின் பெயரும் பரிசீலிக்கப்படலாம்.
டி20 போட்டியில் சிறப்பாக ஆடி வரும் கேதார் ஜாதவ், மணீஷ் பாண்டே, மயங்க் அகர்வால், குருகீரத் சிங் ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளது. 2-வது சுழற்பந்து வீச்சாளராக மூத்த வீரர் ஹர்பஜன் சிங் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அவர் ஐபிஎல் போட்டியில் ஆடிய அனுபவம் கொண்டவர் என்பதால் அவரை சேர்ப்பது குறித்து தேர்வுக்குழுவினர் ஆலோசிக்கலாம்