ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வரலாற்று வெற்றியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தமிழக ஸ்பின்னர் முருகன் அஸ்வினை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் யார்க்கர்களை வீசாதது ஆச்சரியமாக இருந்தது என்றும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
முருகன் அஸ்வின் 1.3 ஓவர்களையே வீசினார். 16 ரன்களை விட்டு கொடுத்தார், கடைசி ஓவரில் முருகன் அஸ்வின் மீண்டும் பந்து வீச வந்தார், ஆனால் அதற்குள் போட்டி கிட்டத்தட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் பக்கம் சாய்ந்து விட்டிருந்தது. கடைசி ஓவரில் முருகன் அஸ்வின் ரியான் பராக்கை வீழ்த்தினார், ஆனால் ஆர்ச்சர், டாம் கரண் வெற்றியை உறுதி செய்தனர்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் தன் ட்விட்டரில் இந்தப் போட்டியை பற்றி வர்ணிக்கையில், “ஸ்மித், சஞ்சு, திவேஷியா பிரமாத பேட்டிங். பெரிய இலக்கை வெற்றிகரமாக விரட்டினார்கள். அமைதியாக ஆடி பிறகு அடித்து ஆடினார்கள், அழகாக ரன் ரேட்டை உயர்த்தினார்கள்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர்கள் யார்க்கர்களை வீசாதது ஆச்சரியமாக இருந்தது. பிறகு முருகன் அஸ்வினையும் சரியாகப் பயன்படுத்தவில்லை” என்று சச்சின் டெண்டுல்கர் விமர்சனம் வைத்தார்.