விளையாட்டு

பேட்ஸ்மெனாக தோனி ‘பேக் ஸீட்’, இனி இப்படித்தான் இருப்பார்- சஞ்சய் மஞ்சுரேக்கர் கருத்து

செய்திப்பிரிவு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நீண்ட இடைவேளைக்குப் பிறகு களம் கண்ட தோனி, தான் இறங்காமல் ஜடேஜா, சாம் கரனை முன்னால் இறக்கி விட்டார்.

இதன் மூலம் விக்கெட் கீப்பராக, அணியின் ஒட்டுமொத்த மேலாளராக, மேற்பார்வையாளராகப் பணியாற்ற தோனி முடிவு செய்து விட்டார் என்று பலராலும் கூறப்பட்டு வருகிறது.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 2 பந்துகள் ஆடினார், ஒன்று பும்ராவின் பவுன்சர் இதில் ஹூக் ஆடப்போய் பந்து சிக்கவில்லை, இதை நடுவர் அவுட் என்று தெரிவிக்க மூன்றாம் நடுவர் உதவியுடன் ஆடி வின்னிங் ஷாட்டையும் அடிக்கவில்லை டுபிளெசிஸ்தான் அடித்தார்.

இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் பத்தி எழுதியுள்ள சஞ்சய் மஞ்சுரேக்கர், இனி தோனி இப்படித்தான் என்ற தொனியில் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்:

“சென்னை முதல் போட்டியில் வென்றது அருமையானது. பந்துகள் திரும்பும் ஸ்பின் பிட்சில்தான் சென்னை இதுவரை வென்று வந்திருக்கிறது. இதனையடுத்து அன்று முதல் போட்டியில் மிகப்பிரமாதமாக ஆடி வென்றது.

தோனியை ஒரு கேப்டனாக நான் முதல் போட்டியில் பார்த்த போது சென்னை 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது தோனி ஜீரோ நாட் அவுட். இரண்டு பந்துகளை மட்டுமே சந்தித்தார்.

தோனி என்ற பேட்ஸ்மென் பின் இருக்கைக்குச் செல்ல தோனி என்ற கேப்டனைத்தான் அதிகம் ரசிகர்கள் பார்க்கப் போகிறார்களா, அப்படி நடந்தால் ரசிகர்கள் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனாலும் இதற்கு ஆதாரங்கள் தேவை.

சாம் கரண், லுங்கி இங்கிடியை அணியில் தேர்வு செய்து கரண், ஜடேஜாவை பேட்டிங்கில் முன்னால் களமிறக்குகிறார் என்பது பேட்ஸ்மெனாக தோனி பின் இருக்கைக்கு செல்கிறாரோ என்பதன் அறிகுறியாக எனக்குப் படுகிறது.

ராஜஸ்தானுக்கு எதிராக சென்னை வெற்றி பெறும் அணி என்ற ஹோதாவில்தான் களமிறங்கும்” என்று அந்தப் பத்தியில் எழுதியுள்ளார் சஞ்சய் மஞ்சுரேக்கர்.

SCROLL FOR NEXT