விளையாட்டு

விராட் கோலி, தோனி உட்பட ஐபிஎல் கேப்டன்களின் சம்பளம் என்ன?

செய்திப்பிரிவு

பணமழை ஐபிஎல் கிரிக்கெட் 2020 நாளை (செப்.19) சிஎஸ்கே அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையிலான முதல் போட்டியுடன் தொடங்குகிறது.

ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாக ஐபிஎல் கேப்டன்களின் சம்பளம் என்ன என்பதைப் பார்ப்போம்:

விராட் கோலி:

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக தொகை வாங்கும் ஒரே வீரர் விராட் கோலி என்றால் அது மிகையல்ல. ஒரு வீரரை தக்க வைக்க கொடுக்கும் அதிகபட்ச விலையை காட்டிலும் மேலும் ரூ.2 கோடி கொடுத்து கோலியை ஆர்சிபி அணி தக்க வைத்துள்ளது. 8வது சீசனாக கேப்டனாக அவர் தொடர்கிறார். இன்னும் சாம்பியன் பட்டம் வெல்லாத ஆர்சிபி கேப்டனின் சம்பளம் ரூ.17 கோடி.

ரோஹித் சர்மா:

கோலியை ஒப்பிடும் போது 4 ஐபிஎல் சாம்பியன் பட்டங்களுடன் சிறந்த ஐபிஎல் கேப்டனாகக் கருதப்படும் ரோஹித் சர்மாவின் சம்பளம் ரூ.15 கோடி. இவருக்கும் கோலி அளவுக்கு சம்பளம் தருவதாகக் கூறப்பட்டதாகவும் ரோஹித் சர்மா அதை மறுத்துவிட்டதாகவும் ஒரு செய்தி உண்டு.

தோனி:

ஐபிஎல் என்றால் தோனி, தோனி என்றால் ஐபிஎல், என்ற அளவுக்கு சிஎஸ்கேவுடன் ஒன்றாகப் பிணைந்த நட்சத்திர ஐபிஎல் வீரர் தோனி, இவரது சம்பளம் ரூ.15 கோடி. 3 முறை கோப்பையை வென்றுள்ளார் 8 முறை இறுதிக்குள் நுழைந்துள்ளார்.

ஷ்ரேயஸ் அய்யர் (டெல்லி கேப்டன்):

ரிஷப் பந்த்திற்குத்தான் கேப்டன்சி போயிருக்க வேண்டும், ஆனால் ஷ்ரேயஸ் அய்யருக்கு அதிர்ஷ்டம் அடித்தது என்று வட இந்திய ஊடகங்கள் கூறுவதுண்டு, இவரது சம்பளம் ரூ.7 கோடி.

ஸ்டீவ் ஸ்மித்:

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் இவரை அந்த நிர்வாகம் ரூ.12 கோடிக்கு தக்கவைத்தது. ஆனால் ஓராண்டுத் தடையினால் இவரால் வருவாய் ஈட்ட முடியவில்லை.

சன் ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ரூ. 12 கோடியும், கிங்ஸ் லெவன் கேப்டன் கே.எல்.ராகுல் ரூ.11 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் ரூ.7.4 கோடியும் சம்பளம் பெறுகின்றனர்.

SCROLL FOR NEXT