விளையாட்டு

ஏ.பி.டிவில்லியர்ஸ் ஒரு  ‘தான்தோன்றி’; சிறந்த ஒரு நாள் வீரர் விராட் கோலி: ஸ்டீவ் ஸ்மித் கலகல

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவின் ரன் எந்திரம் என்று கருதப்படும் ஸ்டீவ் ஸ்மித் இன்றைய கிரிக்கெட் உலகில் சிறந்த ஒருநாள் வீரர் என்றால் அது விராட் கோலிதான் என்று புகழாரம் சூட்டினார்.

இருவரும் ஐபிஎல் தொடரில் சந்திக்கவுள்ள நிலையில் இன்ஸ்டாகிராம் ஒற்றை வரி கேள்வி பதில் அமர்வில் ஸ்டீவ் ஸ்மித் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு அவர் தயாராகி வருகிறார்.

அதில் ரசிகர் ஒருவர் உலகின் சிறந்த ஒருநாள் வீரர் யார்? என்று கேட்க ஸ்மித் ஒருவார்த்தையில் ‘விராட் கோலி’ என்றார்.

அதே போல் இன்னொருவர் ‘ஏ. பி.டிவில்லியர்ஸ் பற்றி ஒரே ஒரு வார்த்தை’ என கேட்க, ஸ்டீவ் ஸ்மித், “தான்தோன்றி” என்றார்.

சஞ்சு சாம்சன் பற்றிய கேள்விக்கு, ‘திறமையானவர்’ என்றார். கே.எல்.ராகுல் பற்றி ஒரு வார்த்தையாக ‘கன்’ என்றார்.

ஜோஸ் பட்லர் பற்றி கூறும்போது, “பயங்கரமான வீரர், இந்த வாரம், ஐபிஎல் தொடரில் அவர் விருப்பத்துக்கு இணங்க ரன்கள் எடுப்பது போல் எங்களுக்கு எதிராக எடுக்காமல் இருந்தால் சரி.

பிடித்த பீல்டர் என்ற கேள்விக்கு, ‘ஜான்ட்டி ரோட்ஸ், ரிக்கி பாண்டிங்’ என்றார்.

SCROLL FOR NEXT