சிஎஸ்கே அணியுடன் முதல் போட்டியில் ஆடவிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டார்.
அப்போது பேட்டிங் செய்த அவர் ஸ்பின்னர் ஒருவர் வீசிய பந்தை மேலேறிச் சென்று நேராக தூக்கி அடிக்க பந்து மைதானத்துக்கு வெளியே பறந்து அங்கு ஓடும் பேருந்து ஒன்றின் ஜன்னலைப் பதம் பார்த்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் இதன் வீடியோவை பகிர்ந்துள்ளனர். சிக்சர் சுமார் 95 மீ தூரம் பறந்தது.
ரோஹித் சர்மா இந்த ஷாட்டை அடித்து தன் முஷ்டியை உயர்த்தி கொண்டாடினார்.
மும்பை இந்தியன்ஸ் ட்விட்டர் பக்கத்தில், “பேட்ஸ்மென்கள் சிக்சர்கள் அடிப்பார்கள், லெஜண்ட்கள் மைதானத்துக்கு வெளியே அடிப்பார்கள். ஆனால் ஹிட்மேன் அடித்த சிக்ஸ் மைதானத்தையும் தாண்டி ஓடும் பேருந்தைத் தாக்கியது” என்ற வாசகத்துடன் அந்த சிக்ஸரின் வீடியோவைப் பகிர்ந்துள்ளது.