விளையாட்டு

நீங்கள் இல்லாமல் சிஎஸ்கே-வை நினைத்துப் பார்க்க முடியவில்லை: ரெய்னாவுக்காக உருகும் ரசிகர்கள்

செய்திப்பிரிவு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து சொந்தக் காரணங்களுக்காக விலக்கிக் கொண்ட இடது கை அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா பயிற்சியை மீண்டும் தொடங்கினார்.

சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் அவருக்கு பிரச்சினை இருந்ததால் வெளியேறினார், இதனையடுத்து சீனிவாசன் கருத்து தெரிவித்தார். பிறகு தன் கருத்தை மறுத்து தான் வீரர்களை எப்போதும் மதிப்பவன், ரெய்னா சிஎஸ்கேவுக்கு செய்த பங்களிப்பு அபாரம், அவர் ஒரு கிரேட் ப்ளேயர் என்று கூறினார்.

பிறகு ரெய்னா கிரிக்பஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் சிஎஸ்கே என் குடும்பம் விரைவில் என்னை அணியில் பார்க்கலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார். அவரது மாமா கொள்ளையர்கள் தாக்குதலில் பலியானதும் அவரை நிலைகுலையச் செய்தது.

ஸ்டீபன் பிளெமிங் மற்றும் தோனி மனது வைத்தால் ரெய்னா மீண்டும் இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே சீருடையில் ஆட முடியும் என்று சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை அணிக்கு தோனி எப்படி முக்கியமோ அதே போல்தான் ரெய்னாவும். இந்நிலையில் ரெய்னா பயிற்சியைத் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டார்.

இதனையடுத்து ரசிகர்களுக்கு அவர் இந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடப்போகிறார் என்று தோன்றியது போலும் பலரும் ரெய்னாவை மீண்டும் அழைத்தனர். சிலர் ஆடுவாரா மாட்டாரா என்று குழப்பத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொதுவாக ரெய்னா மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் ‘நீங்கள் இல்லாமல் சிஎஸ்கே அணியை நினைத்துப் பார்க்க முடியவில்லை’ என்று தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT