விளையாட்டு

இந்திய அணியில் மீண்டும் தேர்வு - பர்வேஸ் ரசூல் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

ஜிம்பாவே தொடருக்குப் பிறகு வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடருக்கு இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் பர்வேஸ் ரசூல் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது:

கிரிக்கெட் விளையாடுவதே நாட்டிற்காக ஆடவேண்டும் என்பதற்காகத்தான். ஜிம்பாப்வே தொடருக்கு என்னைத் தேர்வு செய்தபோது எனது கனவு நனவானது. இந்த முறை மீண்டும் இந்தியாவுக்காக விளையாடப்போவது மகிழ்ச்சி அளிக்கிறது.

"ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் நிச்சயம் கவனம் பெறாமல் போக வாய்ப்பேயில்லை. நான் ரஞ்சி கிரிக்கெட்டில் சுமார் 600 ரன்களையும் 35 விக்கெட்டுகளையும் எடுத்தேன். இன்று இந்திய அணியில் இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் இந்த ஆட்டங்களே. இதில் பல வெற்றிக்கான ஆட்டமாக அமைந்தது என்பதையும் பலரும் கவனித்திருப்பர். ஆனாலும் பஞ்சாபிற்கு எதிராக சதம் எடுத்து 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது வீணாகப் போனது வருத்தமளிக்கவே செய்கிறது" என்றார் ரசூல்.

ஆனால் விளையாடும் 11 வீரர்களில் இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு மிகவும் தற்காப்பாக அவர் கூறிய பதில் இதோ:

"இது பற்றி அணி நிர்வாகமே முடிவெடுக்க வேண்டும். வாய்ப்பிற்காக நான் என்னைத் தயாராக வைத்திருப்பதே என்னால் முடிந்தது" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT