விளையாட்டு

பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கரோனா

செய்திப்பிரிவு

பிரேசிலின் பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் கால்பந்து வீரர் நெய்மருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அவர் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் பி.எஸ்.ஜி கிளப் அணி அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

மேலும், அவ்வணியின் வீரர்களுக்கும் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டென்னிஸ் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு அவர் குணமடைந்தார். இந்த நிலையில் பிரேசிலின் பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பரவியுள்ளது. கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகளைக் கண்டறிய உலக நாடுகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன

SCROLL FOR NEXT