இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையே 2007-ல் நடைபெற்ற தொடரின் போது ஒரு இக்கட்டான தருணத்தில் இந்திய அணி இருந்த போது விவிஎஸ் லஷ்மண் செய்த காரியத்தையும் அது எப்படி தீர்க்கப்பட்டது என்பதையும் முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா வெளிப்படுத்தினார்.
கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் நடந்த சம்பவம் அது. இந்தியா வாசிம் ஜாஃபர் (2), சேவாக் (4) விக்கெட்டுகளை சடுதியில் இழந்தது. சச்சின் டெண்டுல்கர் இறங்க வேண்டும், ஆனால் அவர் முதல் நாள் களத்தில் இல்லாததால் உடனே இறங்க முடியாது, சற்று தள்ளிதான் இறங்க முடியும் என்பது விதிமுறை.
எனவே அடுத்த வீரர் விவிஎஸ் லஷ்மன் இறங்க வேண்டும். ஆனால் லஷ்மண் பேட்டிங்குக்குச் செல்லும் முன் குளிப்பது வழக்கமாம். அவர் குளிக்கச் சென்று விட்டார், அவருக்கு இவ்வளவு சீக்கிரம் இறங்க வேண்டி வரும் என்று, பேட்ஸ்மென் ஒரு நிமிடத்துக்குள் இறங்க வில்லை எனில் நடுவர் இறங்கும் வீரரை அவுட் என்று தீர்ப்பளித்து விடுவார், இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் கங்குலி அவசரம் அவசரமாக கால்காப்பை கட்டிக்கொண்டு இறங்க வேண்டியதாயிற்று.
கிரிக்கெட் என்பது லஷ்மணுக்கு பிரார்த்தனை போன்றது, எனவே பிரார்த்தனைக்குச் செல்லும் குளிக்க வேண்டமா? அதைத்தான் லஷ்மண் செய்தார். ஆனால் இங்கு நெருக்கடி ஏற்பட்டது அப்போது கங்குலிதான் இறங்கினார். கங்குலிக்கு வெள்ளைசட்டையை ஒருவர் கொடுக்க, கால்சட்டையை மற்றொருவர் கொடுக்க, அவரது பேட்டை இன்னொருவர் எடுத்துக் கொடுக்க, இருவர் அவருக்கு கால்காப்பை கட்டி விட்டனர்.
தாத இறங்கி விட்டார், அப்போதுதான் லஷ்மண் சிரித்துக் கொண்டே வாஷ்ரூமிலிருந்து வருகிறார். லஷ்மண் கங்குலியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார், ஏன் எனில் தாதாவுக்கு இப்படியெல்லாம் நடந்தால் பிடிக்காது. ஆனால் விவிஎஸ் லஷ்மணை யாரும் திட்டவும் முடியாது, அதுதான் விஷயம். என்று யூடியூப் வீடியோவில் ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.
கங்குலி அந்த இன்னிங்ஸில் 46 ரன்கள் எடுத்தார். இந்தியா இந்த டெஸ்ட் போட்டியை இழந்தது வேறு கதை.