விளையாட்டு

டி20யில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பவுலர் பிராவோ:  ‘வீரர்களின் கேப்டன் தோனி’க்குப் புகழாரம்

செய்திப்பிரிவு

மே.இ.தீவுகளில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டித் தொடரில் நேற்று தனது 500வது டி20 விக்கெட்டை வீழ்த்தினார் டிவைன் பிராவோ. ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணிக்கு பிராவோ ஆடுவது குறிப்பிடத்தக்கது

மொத்தம் 459 போட்டிகளில் 501 விக்கெட்டுகளை எடுத்து பிராவோ சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் மலிங்கா 295 போட்டிகளில் 390 விக்கெட்டுகளுடன் இருக்கிறார்.

சுனில் நரைன் 339 போட்டிகளில் 383 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் 295 போட்டிகளில் 374 விக்கெட்டுகளையும் பாகிஸ்தானின் சொஹைல் தன்வீர் 339 போட்டிகளில் 356 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடும் டிவைன் பிராவோ, சிஎஸ்கே கேப்டன் தோனியைப் பற்றி கூறியதாவது:

ஒரு வீரராக அழுத்தம் அனைத்தையும் தன்னிடம் எடுத்துக் கொள்வார், பதற்றமடைய மாட்டார். வீரர்களிடத்தில் நம்பிக்கையையும் உறுதியையும் அளிப்பார்.

தோனி எப்போதும் சக வீரர்களின் கேப்டன், அவர் நீண்ட காலம் ஆட வேண்டும் என்பதே ரசிகர்களுடைய, என்னுடைய விருப்பமும். ஆனால் எதார்த்தம் என்னவெனில் ஒரு கட்டத்தில் நாங்கள் நிறுத்தித்தானே ஆகவேண்டும்.

SCROLL FOR NEXT