விளையாட்டு

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தாரிந்து கவுஷல் தூஸ்ரா வீச ஐசிசி தடை

செய்திப்பிரிவு

இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் ஆஃப் ஸ்பின்னர் தாரிந்து கவுஷல் சர்வதேச போட்டிகளில் தூஸ்ரா வீச ஐசிசி தடை விதித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியின் போது தாரிந்து கவுஷல் பந்து வீச்சு மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை ராமச்சந்திரா பல்கலைக் கழகத்தில் உள்ள சோதனைக் கூடத்தில் தாரிந்து கவுஷலின் பந்துவீச்சு பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையில் இவர் ஆஃப் ஸ்பின் வீசும் போது முழங்கை 15 டிகிரிக்கும் குறைவாக மடங்குவது தெரியவந்தது. ஆனால் தூஸ்ரா வீசும் போது முழங்கை 15 டிகிரிக்கும் மேலாக வளைந்ததும் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து சர்வதேச போட்டிகளில் அவர் தூஸ்ரா வீசுவதற்கு ஐசிசி தடை விதித்துள்ளது.

SCROLL FOR NEXT