விளையாட்டு

தோனி அடித்த சிக்ஸ்: விசில் அடித்த சுரேஷ் ரெய்னா

செய்திப்பிரிவு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, பயிற்சியின்போது சிக்ஸர் அடித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

13-வது சீசன் ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்பதற்காக நட்சத்திர அணிகளான ஆர்சிபி, சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிரத்யேக விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் சென்று சேர்ந்தன.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஐக்கிய அமீரகம் செல்வதற்கு முன்னர் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்ட வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

அவ்வீடியோவின் இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்துகளை சிக்ஸர்களுக்கு விளாசுவார். இதனைக் கண்ட சுரேஷ் ரெய்னா மகிழ்ச்சியில் விசில் அடிப்பார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் போட்டிகள் ஏறக்குறைய 53 நாட்கள் துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய 3 நகரங்களில் சேர்த்து மொத்தம் 60 போட்டிகள் நடக்கின்றன.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமாகிய தோனி , கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT