விளையாட்டு

டெஸ்ட் தரவரிசையில் பும்ராவை பின்னுக்குத் தள்ளிய பாக். பவுலர்; கோலி 2ம் இடம்; பிராட் அசத்தல்

பிடிஐ

ஐசிசி பேட்டிங் தரவரிசையில் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 2ம் இடத்தை தக்கவைத்துள்ளார்.

பும்ரா ஐசிசி பவுலர் ரேங்கிங்கில் 9ம் இடத்துக்குச் சரிவு காண, இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் 8ம் இடத்துக்கு முன்னேற பும்ரா 9ம் இடத்துக்கு பின்னடைந்தார்.

டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (911 புள்ளிகள்) முதலிடம் வகிக்க, விராட் கோலி 886 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார்.

பாகிஸ்தானின் பாபர் ஆஸம் 798 புள்ளிகளுடன் 5ம் இடம் வகிக்கிறார். பவுலர்கள் தரவரிசையில் இந்தியாவின் இளம் வேகம் ஜஸ்பிரித் பும்ரா 779 புள்ளிகளுடன் 8ம் இடத்திலிருந்து 9ம் இடத்துக்குச் சரிந்தார்.

தொடர்ந்து இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் அற்புதமாக வீசி வரும் ஸ்டூவர்ட் பிராட் 846 புள்ளிகளுடன் 2ம் இடம் கண்டுள்ளார். 744 புள்ளிகளுடன் ஆண்டர்சன் 14ம் இடத்தில் இருக்கிறார். பாகிஸ்தானின் முகமது அப்பாஸ் 785 புள்ளிகளுடன் பும்ராவை முந்தி 8ம் இடம் பிடித்துள்ளார்.

முதலிடத்தில் அசைக்க முடியாத படி 904 புள்ளிகளுடன் பாட் கமின்ஸ் இருக்கிறார்.

ஆல்ரவுண்டர் தரவரிசையில் பென்ஸ்டோக்ஸ் 454 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். ஜேசன் ஹோல்டர், ஜடேஜா 2, 3 இடங்களில் உள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 5ம் இடத்தில் தொடர்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா 360 புள்ளிகளுடன் முதலிடத்திலும் 296 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2ம் இடத்திலும் 279 புள்ளிகளுடன் இங்கிலாந்து 3ம் இடத்திலும் உள்ளன.

SCROLL FOR NEXT