விளையாட்டு

நீங்கள் என் கேப்டன் அல்ல, நான் தான் உங்கள் கேப்டன்: இம்ரான் கானுக்கு மியாணட் சவால்

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தற்போது பாகிஸ்தான் பிரதமராக உள்ளார். அவருக்கு தற்போது முன்னாள் சக வீரர் ஜாவேத் மியாண்டட் இடமிருந்தே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தில் இம்ரான் கான் எடுத்த சில முடிவுகளை எதிர்த்து ஜாவேத் மியாண்டட் சாடியுள்ளார்.

அவர் இது தொடர்பாகக் கூறும்போது, “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் தற்போது இருக்கும் நிர்வாகத்தினருக்கு கிரிக்கெட் என்றால் ஏபிசிடி கூட தெரியாது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தில் வெளிநாட்டினரை ஏன் நிர்ணயிக்க வேண்டும்? அந்த அளவுக்கு நம் நாட்டில் நிர்வாத்திறமைப் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டதா? முக்கியப் பொறுப்புகளில் ஏன் வெளிநாட்டினருக்கு இடம்? பாகிஸ்தான் மக்களை நம்ப வேண்டும்.

வெளிநாட்டினர் இங்கு ஊழல் செய்து விட்டு அவர்கள் நாட்டுக்குச் சென்று விட்டால் என்ன செய்ய முடியும்? இது குறித்து இம்ரானிடம் பேசுவேன்.

நாம் நாட்டுக்கு சரிப்படாத யாரையும் அனுமதிக்க மாட்டேன்.

நான் தான் உங்களுக்குக் கேப்டன் ஆக இருந்தேன். நீங்கள் எனக்கு கேப்டன் இல்லை. எப்போதும் உங்களைத்தான் நான் வழிநடத்தியுள்ள்ளேன். இப்போது ஏதோ நீங்கள் கடவுள் போல் செயல்படுகிறீர்கள்.

விரைவில் அரசியலுக்கு வருவேன் உங்களுக்கு சவால் அளிப்பேன்.” என்று மியாண்டட் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT