விளையாட்டு

இந்திய அணியின் மிடில் ஆர்டரில் அதிக இடமிருந்தும் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை: மனோஜ் திவாரி புலம்பல்

செய்திப்பிரிவு

2011-ல் மே.இ.தீவுகளுக்கு எதிராக தன் முதல் சதத்தை எடுத்தாலும் பெங்கால் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இடமிருந்தும் தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

விளையாட்டு இணையதளம் ஒன்றின் ஃபேஸ்புக் நேரலை நேர்காணலில் அவர் கூறியதாவது:

ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சென்ற போது மிடில் ஆர்டர் வீரர்கள் ரன்கள் அதிகம் எடுக்கவில்லை. மிடில் ஆர்டரில் எனவே நிறைய இடம் இருந்தது. என்னை அதில் எளிதில் உள்ளே நுழைத்திருக்க முடியும்.

கேப்டனாக இருந்த போது சவுரவ் கங்குலி அருமையான அணியைக் கட்டமைத்தார். 2011 உலகக்கோப்பையை நன்றாக ஆழமாக ஆராய்ந்தால் அதில் நன்றாக ஆடிய வீரர்களை கவனியுங்கள் அவர்கள் அனைவரும் கங்குலி கேப்டனாக இருந்த போது அணிக்குள் வந்தவர்கள்.

விரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன், ஜாகீர் கான், நெஹ்ரா, கம்பீர் என்று நான் பட்டியலிட முடியும். இந்த அனுபவ வீரர்களின் திறமையுடன் தோனியின் அபார கேப்டன்சியில் 2011 உலகக்கோப்பையை வென்றோம்.

என்றார் மனோஜ் திவாரி.

12 ஒருநாள் போட்டிகள் இவர் இந்தியாவுக்காக ஆடியுள்ளார் ஆனால் 287 ரன்களையே எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT