இந்திய ஹாக்கி வீரர் மன்தீப் சிங்கிற்கு கரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா தொற்றிய 6வது இந்திய வீரர் ஆனால் மன்தீப். இத்தகவலை இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
25 வயதான, ஜலந்தரைச் சேர்ந்த மன்தீப் சிங்கிற்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான எந்த ஒரு நோய் குறிகுணங்களும் தென்படவில்லை. இவருடன் 5 மற்ற வீரர்களுக்கும் பெங்களூருவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக இந்திய விளையாட்டு ஆணையம், “மன்தீப் சிங்கிற்கு ஆர்டி-பிசிஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டது. இவருடன் 20 வீரர்களுக்கும் கரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. இதில் அவருக்கு பாசிட்டிவ் என்று தெரியவந்தது, ஆனால் நோய் குறிகுணங்கள் எதுவும் இல்லை” என்று கூறியுள்ளது.
தடுப்பு வீரர் சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், பெனால்டி ட்ராக் பிளிக்கர் வருண் குமார், கோல் கீப்பர் கிஷன் பகதூர் பதக் ஆகியோருக்கும் கரோனா பாசிட்டிவ் என்பதால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இப்போது 5 பேருக்கும் சற்றே கோவிட் நோய் அறிகுறிகள் தென் படுகிறது, மற்றபடி நன்றாக இருக்கின்றனர்.
இவர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய திறன் வளர்ப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.