விளையாட்டு

நான் பார்த்ததில் எம்.எஸ்.தோனிக்கு சிறந்த கிரிக்கெட் மூளை: நடுவர் சைமன் டாஃபல் புகழாரம்

செய்திப்பிரிவு

உலகின் சிறந்த முன்னாள் நடுவர் சைமன் டாஃபல் தான் கண்ட சிறந்த கிரிக்கெட் மூளைகளில் தோனி, ஷேன் வார்ன், டேரன் லீ மேன் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய நேர் காணலில் சைனம் டாஃபல் கூறுகையில், “தோனி, டேரன் லீ மேன், ஷேன் வார்ன் மூவரும் மிகவும் புத்திசாலியானவர்கள்.

தோனியின் நகைச்சுவை உணர்வும் , அமைதியான குணமும் அபாரம்.

தோனி நான் கண்டதில் மிகச்சிறந்த கிரிக்கெட் மூளை படைத்தவர். ஷேன் வார்ன், டேரன் லீ மேன் மூவரும் நான் கண்ட டாப் 3 கிரிக்கெட் மூளைகள். இதில் தோனியின் நகைச்சுவை உணர்வு, அமைதியும் அபாரம், அவரது நகைச்சுவை உணர்வு நிறைய பேர் அறியாதது.” என்றார்.

SCROLL FOR NEXT