விளையாட்டு

பென் ஸ்டோக்ஸ் திடீர் விலகல்: நியூஸி. செல்கிறார்- இங்கிலாந்துக்கு பின்னடைவு

செய்திப்பிரிவு

நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலிருந்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் திடீரென விலகியுள்ளார்.

குடும்ப விவகாரம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் நியூஸிலாந்து செல்லவிருக்கிறார். நியூஸிலாந்தில்தான் பென் ஸ்டோக்ஸின் பெற்றோர் வசித்து வருகின்றனர். அவரது தந்தை உடல் நலம் சரியில்லாமல் போய் தற்போது வீட்டில் குணமாகிவருகிறார்.

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில், “ஸ்டோக்ஸ் குடும்பம் சார்பாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஊடகங்களிடம் கேட்டுக் கொள்வது என்னவெனில் ஸ்டோக்ஸ் குடும்ப அந்தரங்கம் பாதுகாகப்பட வேண்டும் ” என்று கேட்டுக் கொண்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி பவுலர்கள் பென் ஸ்டோக்ஸை ஆட விடவில்லை, 0,9 என்று ஆட்டமிழந்தார் இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் அவர் பாகிஸ்தானை பின்னி எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் சொந்த பிரச்சினை காரணமாக விலக நேரிட்டுள்ளது.

ஜோ ரூட் பார்மும் தடுமாற்றத்தில் இருக்கு நேரத்தில் முதல் டெஸ்ட்டி பாகிஸ்தானுக்கு எதிராக ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ் 139 ரன்கள் கூட்டணி அமைத்து கடும் அழுத்தத்தில் இங்கிலாந்துக்கு ஒரு எதிர்பாரா வெற்றியைப் பெற்று தந்த் அணிய சந்தோஷ அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

இந்நிலையில் பென் ஸ்டோக்ஸுக்கு பதில் ஜாக் கிராலியா அல்லது ஆல்ரவுண்டர் சாம் கரணா என்று முடிவு செய்யப்படவுள்ளது.

SCROLL FOR NEXT