விளையாட்டு

ஐபிஎல் 2020-ன் டைட்டில் ஸ்பான்சராக சீன நிறுவனம் விவோ விலகல்

செய்திப்பிரிவு

ஐபிஎல் 2020 தொடரின் தலைமை ஸ்பான்சராக சீன நிறுவனமான விவோ விலகியுள்ளது என்று தி இந்து ஸ்போர்ட்ஸ்டார் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ம் தேதி தொடங்குகின்றன. இதற்கு டைட்டில் ஸ்பான்சராக சீனாவின் விவோ நீடிக்கும் என்று அன்று பிசிசிஐ கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

2018-ல் 5 ஆண்டுகால ஒப்பந்தத்துக்காக ரூ.2199 கோடி அளித்தது விவோ.

இதற்கிடையே லடாக் கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் எய்தியதையடுத்தும், தொடர்ந்து எல்லையில் படைகளை அகற்றாமல் சில இடங்களில் தக்கவைத்திருப்பதும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே வேறுபாடுகளை வளர்த்து வருகிறது.

இந்நிலையில் விவோ டைட்டில் ஸ்பான்சரிலிருந்து வெளியேறியதாக தகவல்கள் வந்துள்ளன, பிசிசிஐ அல்லது விவோ இருதரப்பில் எந்தத் தரப்பும் இதனை உறுதி செய்யவில்லை.

சீனாவுக்கு எதிரான ஒரு உணர்வு இருப்பதையடுத்து சீன நிறுவனம் தொடருவதை விரும்பவில்லை என்று தெரிகிறது.

ஆனால் சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ ரத்து செய்யாது, ஏனெனில் பெரிய அளவில் இழப்பீடு அளிக்க வேண்டி வரும். இதற்கிடையே இந்தத் தொடருக்காக ரூ.440 கோடி அளிக்கும் ஒரு மாற்று டைட்டில் ஸ்பான்சரை பிசிசிஐ தேட வேண்டியுள்ளது.

SCROLL FOR NEXT