விளையாட்டு

ஐபிஎல் தொடருக்காக... : இன்னொரு கிரிக்கெட் தொடரும் ரத்து

செய்திப்பிரிவு

ஐபிஎல் 2020 தொடரை நடத்த அப்படி இப்படி உலகக்கோப்பை டி20-யை ஒத்திப் போட வைத்து தனக்குச் சாதகமாக்கியுள்ள பிசிசிஐ தற்போது இன்னொரு சர்வதேச தொடரையும் ரத்து செய்துள்ளது.

அதாவது அக்டோபர் 11 - 17 தேதிகளில் இந்தியா-ஆஸ்திரேலியா டி20 சர்வதேசத் தொடர் நடப்பதாக இருந்தது, ஐபிஎல் உடன் இது மோதும் என்பதால் இந்தத் தொடரை தற்போது ரத்து செய்துள்ளனர்.

செப்.10 முதல் நவம்பர் 10 வரை ஐபிஎல் 2020 தொடர் யுஏஇ-யில் நடைபெறுகிறது. எனவே இன்னொரு சர்வதேச தொடர் ஐபிஎல் தொடருக்காக ரத்து செய்யப்படவிருக்கிறது.

ஆனால் ஆஸ்திரேலியா தொடரில் 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் இடம்பெறும், இது நடைபெறும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா உத்தரவாதம் அளித்துள்ளது.

அதே போல் டெஸ்ட் போட்டிகளில் பாரம்பரிய புகழ்மிக்க பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னை விட்டு முதல் முறையாக மாற்றப்படலாம், காரணம் விக்டோரியா மாகாணத்தில் கோவிட் 10 பரவல் அதிகரித்திருப்பதே.

SCROLL FOR NEXT