விளையாட்டு

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரானார் முன்னாள் ஆல்ரவுண்டர் இயன்போத்தம்

பிடிஐ

பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தின் ‘ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்’ உறுப்பினராக்கப்பட்டார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆல் ரவுண்டர் இயன் போத்தம்.

64 வயதாகும் இயன் போத்தம் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 36 பேர்களில் ஒருவர்.

1977 முதல் 1992 வரை 102 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய இயன் போத்தம், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட்டை ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டுக்காகவும், இவரது சமூக சேவைக்கும் அங்கீகாரம் அளித்து 2007-ல் நைட்ஹுட் கவுரவம் அளிக்கப்பட்டது.

2011-ல் இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டன் ரசேல் ஹெய்ஹூ பிளிண்ட் என்பவர் உறுப்பினராக்கப்பட்டார், அதன் பிறகு தற்போது இயன் போத்தம் நாடாளுமன்ற உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

டேவிட் ஷெப்பர்ட், காலின் கவுட்ரி, லியரி கான்ஸ்டன்டைன் ஆகியோருக்கும் இதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT