விளையாட்டு

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தங்களுக்குச் சாதகமாக களத்தை உருவாக்குவதில்லையா?- கொந்தளித்த ஆண்டர்சன்

ஐஏஎன்எஸ்

நடந்து முடிந்த ஆஷஸ் தொடரில் தங்களுக்குச் சாதகமாக இங்கிலாந்து பிட்சை தயாரித்தது என்ற குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாடியுள்ளார்.

"கிரிக்கெட் போட்டியை நடத்தும் நாடு தங்களுக்கு சாதகமாக பிட்ச் தயாரிப்பதில் பெரிய தீமையோ, வெட்கமோ எதுவும் இல்லை" என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பயிற்சியாளர் டிரவர் பெய்லிஸின் கோரிக்கைக்கு இணங்க, கடந்த 2 ஆஷஸ் தொடரின் தூசி தும்பட்டை பிட்ச் தற்போது பசுந்தரையாக மாறியிருந்தது. ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து 3-2 என்று டெஸ்ட் தொடரில் வீழ்த்தியது.

“கடந்த காலங்களிலும் இப்படியே செய்திருக்க வேண்டும், எதிர்காலத்திலும் எங்களுக்குச் சாதகமான பிட்சையே தயாரிப்போம்.

நாங்கள் ஆஸ்திரேலியா செல்லும் போது அங்கு அவர்களுக்குச் சாதகமாக பிட்ச் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவுக்குச் சென்றாலும் இதே கதைதான். ஆனால் நாங்கள் செய்தால் இது ஏதோ பெரிய தவறு போல் சித்தரிக்கப் படுகிறது.

பிட்ச் பற்றி எங்களிடம் கருத்து கேட்கப்பட்டது, எனவே கருத்து தெரிவிக்கப்பட்டது அவ்வளவே, நினைப்பது போல் எங்களுக்கு இப்படி பிட்ச் தயார் செய் என்று நாங்கள் கட்டாயப்படுத்துவதாக அது ஆகாது.

அப்படியே நாங்கள் செய்திருந்தாலும் தவறில்லை; உலகில் அனைவரும் இதைத்தான் செய்கின்றனர், இங்கு மட்டும் ஏன் வித்தியாசமாக இருக்க வேண்டும்?” என்று ஆண்டர்சன் கேள்வி எழுப்பினார்.

SCROLL FOR NEXT