விளையாட்டு

தேசிய விளையாட்டு விருதுகள் தேர்வுக்குழுவில் விரேந்திர சேவாக்

பிடிஐ

இந்திய ஹாக்கியின் லெஜண்ட் தயான் சந்த் பிறந்த தினமான ஆகஸ்ட் 29ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்படும்.

இந்த ஆண்டு இந்த விளையாட்டு விருதுகளுக்காக விளையாட்டுத் துறை அமைச்சர் 12 உறுப்பினர் தேர்வுக்குழுவை நியமித்துள்ளது.

இந்தக் குழுவில் இந்திய முன்னாள் தொடக்க வீரரும் இரண்டு முச்சத நாயகனுமான விரேந்திர சேவாக் சேர்க்கப்பட்டுள்ளார். இவருடன் ஹாக்கி வீரர் சர்தார் சிங்கும் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். ன்

இந்தத் தேர்வுக்குழுவுக்குத் தலைமை வகிப்பவர் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி முகுந்தகம் ஷர்மா. இந்தக் குழுவில் பாராலிம்பிக் வெள்ளி வீராங்கனை தீபா மாலிக்கும் இடம்பெற்றுள்ளார்.

பல கமிட்டிகளை அமைத்தால் சர்ச்சைகள் ஏற்படுகிறது என்பதற்காக ஒரே தேர்வுக்குழுவை நியமித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு முன்னாள் வீரர் மோனாலிசா பருவா மேத்தா, குத்துச் சண்டை வீரர் வெங்கடேசன் தேவராஜன், விளையாட்டு வர்ணனையாளர் மணீஷ் படாவியா, பத்திரிகையாளர் அலோக் சின்ஹா, மற்றும் நீரு பாட்டியா ஆகியோர் உள்ளனர்.

விளையாட்டுத்துறை அமைச்சகத்திலிருந்தும் இந்தக் குழுவில் பிரதிநிதித்துவம் இருக்கிறது. இந்திய விளையாட்டு ஆணையம் தலைமை இயக்குநர் சந்தீப் பிரதான். ஸ்போர்ட்ஸ் டெவெலப்மெண்ட் இணைச் செயலர் எல்.எஸ்.சிங், டார்கெட் ஒலிம்பிக் போடியம் சி.இ.ஓ. ராஜேஷ் ராஜகோபாலன் ஆகியோர் உள்ளனர்.

SCROLL FOR NEXT