கிரெய்க் மெக்டர்மட் மகன் அலிஸ்டர் மெக்டர்மட் ஓய்வு. | கெட்டி இமேஜஸ். 
விளையாட்டு

ஆஸி. முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிரெய்க் மெக்டர்மட் மகன் 29 வயதில் விரக்தியில் ஓய்வு

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிரெய்க் மெக்டர்மட்டின் மகன் அலிஸ்டர் மெக்டர்மட் 29 வயதிலேயே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்து விட்டார்.

தொடர்ந்து காயமடைந்து இடையூறுடன் கூடிய கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசியாக அடைந்த காயம் 12 மாத காலத்துக்கு அவரை ஆட முடியாமல் செய்தது, இதனையடுத்து அவர் விரக்தியில் கிரிக்கெட்டிலிருந்தே ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார்.

18 வயது இளம் வேகப்பந்து வீச்சாளராக 2009-ல் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமான போது அடுத்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் இவர்தான் என்ற அளவுக்கு இவரது பவுலிங் இருந்தது. 2011-ல் ஆஸ்திரேலிய அணியில் நுழைவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்,.

இவர் ஆடிய போது இவரது ஷெஃபீல்ட் ஷீல்ட் அணி பல ஒருநாள் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது. பிக்பாஷ் டி20 லீக் தொடரின் 2வது அத்தியாயத்தில் இவர் ஆடிய பிரிஸ்பன் ஹீட் டீம் சாம்பியன் ஆனடு குறிப்பிடத்தக்கது. இவற்றையெல்லம் சாதிக்கும் போதுஅலிஸ்டர் மெக்டர்மட்டுக்கு வயது 22 தான்.

கை உடைந்து ,எலும்பு முறிவு ஏற்பட்டு இவரால் குவீன்ஸ்லாந்து அணிக்கு 2018-19 சீசனில் ஆட முடியாமல் போனது

இதனையடுத்து விரக்தியில் அவர் ஓய்வு அறிவித்து விட்டார்.

2009 முதல் அலிஸ்டர் விளையாடிய 20 முதல் தரப் போட்டிகளில் 75 விக்கெட்டுகளை 24.77 என்ற சராசரியில் அவர் கைப்பற்றியிருந்தார்.

22-வது வயதில் ஆரம்பித்த காயம் இவரை விடவில்லை. 7 ஆண்டுகளில் 4 முறை எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகள் இவருக்கு நடந்தன.

இவர் இனி பயிற்சியாளர் பொறுப்பில் தொடர்வார் என்று தெரிகிறது.

தந்தை மெக்டர்மட் மிகப்பிரமாதமான பவுலர், மெக்ரா வருவதற்கு முன்னர் கிரெய்க் மெக்டர்மட்தான் ஆஸி.யின் முன்னிலை வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.

71 டெஸ்ட் போட்டிகளில் கிரெய்க் மெக்டர்மட் 291 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 28.63 தான் சராசரி. 138 ஒருநாள் போட்டிகளில் 203 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

1987 உலகக்கோப்பையை ஆலன் பார்டர் தலைமையில் ஆஸ்திரேலியா வென்ற போது மெக்டர்மட் முன்னணி பவுலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவரது மகன் அலிஸ்டர் மீது பெரிய நம்பிக்கை இருந்தது, ஆனால் காயத்தினால் இன்று அலிஸ்டர் மெக்டர்மட் என்ற ஒரு சிறந்த வேகப்பந்து திறமையை கிரிக்கெட் உலகம் இழந்திருக்கிறது.

SCROLL FOR NEXT