விளையாட்டு

6 சிக்சர்களை விடுங்கள், ஸ்டூவர்ட் பிராட் ஒரு சாம்பியன்: சாதனையைப் பாராட்ட ரசிகர்களுக்கு யுவராஜ் சிங் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

ஸ்டூவர்ட் பிராட் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இங்கிலாந்து பவுலரும் 4வது வேகப்பந்து வீச்சாளரும், மொத்தத்தில் 7வது பவுலராகவும் மே.இ.தீவுகளுக்கு எதிராக புதிய டெஸ்ட் சாதனையை நிகழ்த்தினார்.

இதற்காக பலதரப்பிலிருந்தும் பிராடுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஷேன் வார்ன், தன் ட்விட்டரில், 700 விக்கெட்டுகள் எடுக்க வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 2007 டி20 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங், ஸ்டூவர்ட் பிராடை ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசி அவரது டி20 கரியரை காலி செய்தார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பிராட் உண்மையில் ஒரு பெரும் சக்திதான் என்பதை நிரூபித்து விட்டார்.

இந்நிலையில் யுவரா சிங் தன் ட்விட்டர் பக்கத்தில் ஸ்டூவர்ட் பிராட் ஒரு சாம்பியன் என்று கூறி பாராட்டும் போது, “ஒவ்வொரு முறை பிராட் பற்றி ஏதாவது எழுதினாலே நான் அவர் ஓவரில் 6 சிக்சர்களை அடித்ததையே பேசுகின்றனர்.

என் ரசிகர்கள் பிராடை பாராட்ட வேண்டும், அவர் ஒரு சாம்பியன் பவுலர். டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் என்பது சாதாரணமல்ல.

இது அவரது மன உறுதி, அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்குக் கிடைத்த பரிசு. பிராட் நீங்கள் ஒரு சாம்பியன், உங்கள் சாதனை தொடர வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT