விளையாட்டு

ஒரு பவுலரை நுணுக்கமாக ஆராய்ந்து பிறகு அவர் பந்தை மைதானத்துக்கு வெளியே அடிக்கும் சுகமே தனி: விராட் கோலி 

ஏஎன்ஐ

பந்தை எதிர்கொள்வதற்கு முன் எந்த ஒரு பவுலரையும் நுணுக்கமாக ஆராய்ந்து அதன் பிறகு ஆதிக்கம் செலுத்துவதே தான் கண்ட வழிமுறை என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

86 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி இதுவரை 7,240 ரன்கள் எடுத்துள்ளார். 27 சதங்கள் 22 அரைசதங்கள். 248 ஒருநாள் போட்டிகளில் இதுவரை 11,867 ரன்கள், சராசரி 59.33.

பிசிசிஐ டிவி இணையதளத்துக்கான உரையாடலில் மயங்க் அகர்வாலுடன் பேசிய விராட் கோலி கூறியதாவது:

ஒரு பவுலரின் அனைத்து விஷயங்களையும் நுணுக்கமாக ஆராய்வேன். ஒரு குறிப்பிட்ட விதமான பந்தை வீசுகிறாரா, அப்படி வீசும் போது அவரது உடல் மொழி எப்படி இருக்கிறது, ரன் அப் மாறுகிறதா, அவரது மணிக்கட்டு எப்படி இருக்கிறது, பந்தை வித்தியாசமான முறையில் பிடித்திருக்கிறாரா என்று ஆராய்வேன்.

இதை நான் பலமுறை செய்திருக்கிறேன். இப்படி நுணுக்கமாக ஆராய்ந்த பிறகு அந்த பவுலரின் பந்தை தூக்கி மைதானத்துக்கு வெளியே அடிக்கும் சுகமே அலாதியானது.

இதோடு அவர் நம்மை நோக்கி என்ன கொண்டு வருகிறார் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். நாம் பயந்து கொண்டே ஆடினால், அதாவடு அவுட் ஆகி விடக்கூடாது என்பதிலேயே கவனம் செலுத்தினால் நாம் எதையும் கவனிக்க முடியாது. முதலில் கவனிக்க வேண்டும் அப்படிச் செய்தால் பயம் பறந்து போகும்.

என்றார் விராட் கோலி.

SCROLL FOR NEXT