விளையாட்டு

தோனியுடன் இணையும் சேவாக்

பிடிஐ

நிதிதிரட்டுவதற்காக நடத்தப்படும் டி-20 கண்காட்சிப் போட்டியில் இந்திய ஒரு நாள் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியுடன், வீரேந்திர சேவாக் இணைந்து விளையாடவுள்ளார்.

ஹெல்ப் பார் ஹீரோஸ் லெவன் எனப் பெயரிடப்பட்ட அணிக்காக, இங்கிலாந்தின் ஆண்ட்ரூ ஸ்ராஸ் தலைமையில் தோனி, ஷாகித் அப்ரிடி, கிப்ஸ், சேவாக் உள்ளிட்டோர் ஒரே அணியில் விளையாடுகின்றனர்.

இந்த அணி, பிரெண்டன் மெக்கல்லம், மேத்யூ ஹைடன், மஹேலா ஜெயவர்தனே, கிரீம் ஸ்மித், ஸ்காட் டைரிஸ், வெட்டோரி உள்ளிட்டோர் அடங்கிய உலக லெவன் அணியை எதிர்த்து விளையாடுகிறது. வரும் 17-ம் தேதி இப்போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

SCROLL FOR NEXT