இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடருக்காகச் செல்கிறது.
இதற்காக இந்திய அணி கட்டாயத் தனிமையில் இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிபந்தனை விதித்தது. குவாரண்டைன் நாட்களைக் குறைக்க பிசிசிஐ தலைவர் கங்குலி கோரிக்கை வைத்தார்.
ஆனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் சி.இ.ஓ. நிக் ஹாக்லி கங்குலி கோரிக்கையை ஏற்க மறுத்து 14 நாட்கள் கட்டாய தனிமையில் மாற்றமில்லை, இந்திய வீரர்கள் இங்கு வந்தவுடன் இதனைக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் இந்திய வீரர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட மண்டலத்தில் சிறந்த பயிற்சி வசதிகள் செய்து தரப்படும். எனவே போட்டிகளுக்கான தயாரிப்பில் எந்த வித அதிருப்தியும் இந்திய வீரர்க்ளுக்கு ஏற்படாது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா சி.இ.ஓ. உறுதி அளித்துள்ளார்.
அதே போல் இங்கிலாந்தில் உள்ளது போன்ற பயோ-செக்யூரிட்டி பாதுகாப்பு முறைகள் டெஸ்ட்டிங்குகள் இரு தரப்பு வீரர்களுக்கும் உண்டு என்றார அவர்.
இந்தியாவில் கரோனா பரவல் எகிறி வரும் நிலையில் பரிசோதனை இல்லாமல் எதுவும் இல்லை என்கிறார் அவர்.