விளையாட்டு

2015 உலகக் கோப்பை மே.இ.தீவுகள் அணியிலிருந்து 8 வீரர்கள் மாற்றம்: கெய்ல் இல்லை

செய்திப்பிரிவு

இலங்கையில் நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கான மே.இ.தீவுகளின் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2015 உலகக் கோப்பைக்குச் சென்ற மே.இ.தீவுகள் அணியில் 8 பேர் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அணியில் இல்லை. ஒரே ஆறுதல் சுனில் நரைன் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார். கிறிஸ் கெய்ல் இரண்டு அணிகளிலும் இல்லை. முதுகு அறுவை சிகிச்சை காரணமாக அவர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

டேரன் சமி, லெண்டில் சிம்மன்ஸ், சுலைமான் பென், ஷெல்டன் காட்ரெல், நிகிடா மில்லர், கிமார் ரோச், டிவைன் ஸ்மித் ஆகியோர் ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பதிலாக தேவேந்திர பிஷூ, ஜெர்மைன் பிளாக்வுட், கார்லோஸ் பிராத்வெய்ட், ஆந்த்ரே பிளெட்சர், ஜேசன் மொகமது, மற்றும் ரவி ராம்பால் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளனர். உலகக் கோப்பை அணியிலிருந்து விலகிய டேரன் பிராவோ, சுனில் நரைன் மீண்டும் அணிக்கு வந்துள்ளனர்.

தொடர்ந்து அதிரடி ஆல்ரவுண்டர்களான டிவைன் பிராவோ, கெய்ரன் போலார்ட் ஆகியோர் ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் டி20 அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் அணி: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), தேவேந்திர பிஷூ, ஜெர்மைன் பிளாக்வுட் கார்லோஸ் பிராத்வெய்ட், டேரன் பிராவோ, ஜானதன் கார்ட்டர், ஜான்சன் சார்லஸ், ஆந்த்ரே பிளெட்சர், ஜேசன் மொகமது, சுனில் நரைன், தினேஷ் ராம்தின், ரவி ராம்பால், ஆந்த்ரே ரசல், மர்லன் சாமுயெல்ஸ், ஜெரோம் டெய்லர்.

டி20 அணி: டேரன் சமி (கேப்டன்), சாமுயேல் பத்ரி, டேரன் பிராவோ, டிவைன் பிராவோ, ஜானதன் கார்ட்டர், ஜான்சன் சார்லஸ், ஆந்த்ரே பிளெட்சர், ஜேசன் ஹோல்டர், சுனில் நரைன், கெய்ரன் பொலார்ட், தினேஷ் ராம்தின், ரவி ராம்பால், ஆந்த்ரே ரசல், மர்லன் சாமுயெல்ஸ், ஜெரோம் டெய்லர்.

SCROLL FOR NEXT