அமெரிக்க ஓபனில் சானியா மிர்சா சாம்பியன் பட்டம் வென்றது, கிரிக் கெட்டில் என்னையும் சாதிக்க தூண்டியுள்ளது என அவருடைய கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான ஷோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா-ஸ்விட் சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென் றது. முன்னதாக விம்பிள்டன் போட்டி யிலும் இந்த ஜோடி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.