விளையாட்டு

லாக்-டவுனுக்குப் பிறகு ஜோ டென்லி 14, கோலி-0: இங்கிலாந்து  கவுன்ட்டி கிளப் தமாஷ்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பெருந்தொற்றினால் நின்று போயிருந்த கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து - மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடர் தொடக்கத்தின் மூலம் மீண்டும் உயிர் பெற்றது.

இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் கேப்டன் ஹோல்டர் ஸ்விங்குக்கும், ஷனன் கேப்ரியல் வேகத்துக்கும் ஈடு கொடுக்க முடியாமல் 204 ரன்களுக்குச் சுருண்டது, இது ஜோ டென்லி 18 ரன்களில் ஷனன் கேப்ரியல் பந்தை ஆடாமல் விட்டு ஸ்டம்பையும் கோட்டை விட்டார்.

மே.இ.தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் பிரமாதமாக ஆடி 318 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட் கிளப்பான கென்ட், தனது கென்ட் கிரிக்கெட் ட்விட்டர் தளத்தில் லாக்டவுனுக்குப் பிறகு ரன்கள், ஜோ டென்லி - 14, விராட் கோலி -0 என்று தமாஷ் செய்திருந்தது. இது ஒரு தமாஷ்தான் ஆனால் கோலியை கேலி செய்தால் நம் நெட்டிசன்கள் சும்மா விடுவார்களா?


ஒரு நெட்டிசன், ஆம் டென்லி, விராட் கோலி மட்டுமல்ல கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரையும் கடந்து விட்டார் போங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இன்னொரு நெட்டிசன் லாக்டவுனுக்குப் பிறகு பவுல்டு டென்லி 1 கோலி-0 என்று பதிலடி கொடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT