விளையாட்டு

ரஞ்சி கிரிக்கெட் தொடர்: டெல்லி உத்தேச அணியில் கோலி, தவன், இஷாந்த் சர்மா - கவுதம் கம்பீருக்கும் வாய்ப்பு

செய்திப்பிரிவு

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 45 பேர் கொண்ட டெல்லி உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி, முன்னணி தொடக்க வீரரான ஷிகர் தவன், வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோல் கவுதம் கம்பீர், ஆசிஷ் நெஹ்ரா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். இந்த உத்தேச அணிக்கான பயிற்சி முகாம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

இது தொடர்பாக டெல்லி கிரிக்கெட் சங்க துணைத் தலைவர் சேதன் சவுகான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திங்கள்கிழமை காலை 8.30 மணிக்கு பயிற்சி முகாம் தொடங்குகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் மதன் லால் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தேச அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களும் மதன் லால் முன்னிலையில் ஆஜராக வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணி விவரம்:

விராட் கோலி, ஷிகர் தவன், கவுதம் கம்பீர், ரஜத் பாட்டியா, இஷாந்த் சர்மா, ஆசிஷ் நெஹ்ரா, மிலின்ட் குமார், யோகேஷ் நாகர், வைபவ் ராவல், உன்முக்த் சந்த், புனீத் பிஷ்ட், பிரதீன் சங்வான், மோஹித் சர்மா, பர்விந்தர் அவானா, சுமிர் நர்வால், விகாஸ் டோகாஸ், ஷெல்லி ஷார்யா, ஷித்திஷ் சர்மா, ஜக்ரித் ஆனந்த், ஆதித்ய கவுஷிக், நிதிஷ் ரானா, பிரதியூஷ் சிங், ஹிம்மத் சிங், துருவ் ஷோரி, சர்தக் ரஞ்சன், ராகுல் யாதவ், பவன் சுயால், ஜாவித் கான், நவ்தீப் சைனி, வருண் சோட், மனன் சர்மா, பவன் நெகி, விகாஸ் மிஸ்ரா, சிவம் சர்மா, அர்ஜுன் குப்தா, ரிஷப் பந்த், ஜெய்தீப் சவுகான், பிரதீப் மாலிக், சரங் ராவத், ராஜேஷ் சர்மா, சவுரவ் பாஸி, ககன் பாட்டியா, சிதாந்த் சர்மா, ரிஷித் சைனி, சாகர் மாலிக்.

SCROLL FOR NEXT