உலக மல்யுத்தப் போட்டியின் கிரேக்கோ-ரோமன் பிரிவில் இந்தியாவின் பபிதா குமாரி, வினேஷ் போகத் உள்ளிட்ட 3 வீராங்கனைகள் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் 53 கிலோ எடைப் பிரிவில் பபிதா குமாரி 17-4 என்ற புள்ளிகள் கணக்கில் கொலம்பியாவின் எய்ட் மேரியோரியையும், 9-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்பெயினின் கரிமா ரேமிஸையும், 13-6 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெர்மனியின் நினா ஹெம்மரையும் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆனால் காலிறுதியில் சீனாவின் ஸியூசுன் ஸாங் 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் பபிதாவை தோற்கடித்தார். அதேநேரத்தில் வினேஷ் போகத், நவ்ஜோத் கவுர் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றை தாண்டவில்லை.