விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது

பிடிஐ

இலங்கை பேட்ஸ்மேன் குசால் மெண்டிஸ் காரில் சென்ற போது நடந்து சென்று கொண்டிருந்த 74 வயது முதியவர் மீது காரை மோதியதில் அவர் பரிதாபமாக பலியானார்.

இதனையடுத்து குசால் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு புறநகர் பகுதியான பனாதுராவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

கைது செய்யப்பட்ட குசால் மெண்டிஸ் இன்று மேஜிஸ்ட்ரேட் முன்னால் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இலங்கை அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய குசால் மெண்டிஸ் 76 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் ஆடியுள்ளார்.

கோவிட் 19 லாக் டவுனுக்குப் பிறகு தேசிய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார்.

இந்தியாவுக்கு எதிரான தொடர் ரத்து செய்யப்பட்டது உட்பட இலங்கையின் சர்வதேச தொடர்கள் கரோனாவினால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாலை விபத்தில் இவர் கைது செய்யப்பட்டிருப்பது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT