விளையாட்டு

ஃபேர் அண்ட் லவ்லி என்று ஏன் பெயர் வைக்கிறார்கள்: மே.இ.வீரர் டேரன் சமி கேள்வி

செய்திப்பிரிவு

ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பரினத்தவர் போலீஸாரால் கொல்லப்பட்டதையடுத்து கிரிக்கெட் உலகில் ‘கருப்பர்கள் வாழ்க்கை முக்கியம்’ என்ற வாசகத்தின் செயல் வீரராகத் திகழ்கிறார் மே.இ.தீவுகள் வீரர் டேரன் சமி.

ஏன் ஐசிசியும் பிற கிரிக்கெட் வாரியங்களும் நிறவெறிக்கு எதிராக பேசுவதில்லை என்று தர்மசங்கடமான கேள்வியையும் தன்னை கருப்பர் என்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியில் கேலி செய்ததையும் இதற்காக அவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் சரமாரியாக கடும் கோபத்துடன் கருத்துகளை வெளியிட்டு வந்தார் டேரன் சமி.

தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றில் அவர் அளித்த பேட்டியில், ‘இந்தியாவில் உள்ள பன்முகக் கலாச்சாரத்தில் பல்வேறு நிறங்களில் உள்ள மக்கள் திரள் மத்தியில் எப்படி ஃபேர் அண்ட் லவ்லி என்று ஒரு கிரீமுக்கு பெயர் வைத்து அதை ஏற்றுக் கொள்கிறீர்கள். இந்தப் பெயரிலேயே நிறப்பாகுபாடு இருக்கிறதே.

உங்கள் விளம்பரம் வெள்ளை நிறமே அழகு என்கிறதே. இது நிறபேதத்தை சூசகமாக அறிவிக்கிறதே’ என்றார்.

ஜார்ஜ் பிளாய்ட் மரணத்துக்குப் பிறகே அமெரிக்காவில் பல நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் விளம்பர வாசகங்களை மாற்றி வருகிறது.

அதே போல் ஃபேர் அண்ட் லவ்லியின் யுனிலீவர் நிறுவன தலைவர் சன்னி ஜெயின் கூறும்போது , “ஃபேர், ஒயிட், லைட் போன்ற வார்த்தைகள் ஒற்றை அழகு குறித்த பொருள்களைக் கொண்டுள்ளதை புரிந்து கொள்கிறோம். இது சரியல்ல என்றே கருதுகிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT