முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் ராபின் சிங் காய்கறி வாங்க காரில் சென்றார். ஊரடங்கு அமலில் இருந்ததையடுத்து அவரது காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் வசிக்கும் ராபின் சிங் திருவான்மியூருக்கு காய்கறி வாங்க காரில் சென்றார். சென்னையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் 2 கிமீ-க்குள் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ராபின் சிங்கிடம் அனுமதிக்கான இ-பாஸ் எதுவும் இல்லை. இதையடுத்து ஊரடங்கை மீறியதற்காக அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.