வங்கதேச கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற வீரரும் முன்னாள் கேப்டனுமான மஷ்ரபே மோர்டசாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து டாக்காவில் அவர் தன் இல்லத்தில் சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்கள் சார்பில் மோர்டசாவை தொடர்பு கொள்ள முடியவில்லை, ஆனால் அவரது குடும்பத்தினர் தகவலை உறுதி செய்தனர்.
இது தொடர்பாக மஷ்ரபேயின் இளைய சகோதரர் மோர்சலின் மோர்டஸா தி இந்து ஸ்போர்ட்ஸ்டாருக்குக் கூறும்போது,
“அண்ணனுக்கு கடந்த 2 நாட்களாக உடல் நிலை சரியில்லை, காய்ச்சல் இருந்தது. அதனால் டெஸ்ட் எடுத்துக் கொண்டார். அதில் கரோனா பாசிட்டிவ் என்று தெரிந்தது.
அதனால் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். இவரது குடும்பத்தினர் சிலருக்கும் முன்னதாக கரோனா பாசிட்டிவ் ஆனதாக வங்கதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமீம் இக்பால் அண்ணன் நபீஸ் இக்பாலுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நபீஸ் தற்போது சிட்டகாங்கில் வீட்டுத் தனிமையில் இருக்கிறார்.
கடந்த வாரம் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரீடிக்கு கரோனா பாசிட்டிவ் உறுதியானது குறிப்பிடத்தக்கது.