தன்னுடன் ஆடிய சக வீரர்கள், தனக்கு உத்வேகம் அளித்த வீரர்களுக்கு புகழ்மாலை சூட்டி வருகிறார் ஸ்டைலிஷ் பேட்ஸ்மென் விவிஎஸ் லஷ்மண்.
அந்த வகையில் சச்சின், கங்குலி, திராவிட், கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோருக்கு அடுத்த படியாக ‘விரூ’ என்று செல்லமாக அழைக்கப்படும் விரேந்திர சேவாக் பற்றி புகழாரம் சூட்டியுள்ளார் லஷ்மண்.
இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், உயர்தர வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவரது திறமையைக் கேள்வி கேட்பவர்களை முறியடிக்கும் விதமாக விரேந்திர சேவாக், டெஸ்ட் வரலாற்றின் மிகச்சிறந்த அதிரடி வீரர்களுள் ஒருவராகத் தன்னை நிறுவிக் கொண்டார்.
விரூவின் ஆழமான தன்னம்பிக்கை மற்றும் நேர்மறையான குணம் திகைக்க வைப்பது என்பதோடு அடுத்தவர்களையும் எளிதில் தொற்றிக் கொள்வதாகும், என்று புகழ்ந்துள்ளார் விவிஎஸ் லஷ்மண்.
104 டெஸ்ட்களில் விரூ 8,586 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 49.34. இதில் 23 சதங்கள், 32 அரைசதங்கள். இரண்டு முச்சதங்கள், ஒரு 293.
இன்று வரை 278 பந்துகளில் முச்சதம் அடித்த ஒரே வீரர் என்ற உலக சாதனையை தன் வசம் வைத்துள்ளார். 251 ஒருநாள் போட்டிகளில் 8,273 ரன்கள் 15 சதங்கள் 38 அரைசதங்கள் விரூவுக்குச் சொந்தமானது.